Saturday, November 24, 2018

எச்சில் துப்பினால் ரூ.1 லட்சம் அபராதம்



கோல்கட்டா : பொது இடத்தில் அசுத்தம் செய்வோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான மசோதா, மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.



மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல், காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள காளி கோவிலுக்கு செல்லும் வகையில், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நடை மேம்பாலத்தை, முதல்வர் மம்தா பானர்ஜி, சமீபத்தில் திறந்து வைத்தார்.



இரண்டு நாட்களுக்கு முன், அந்த மேம்பாலத்தில் சென்ற முதல்வர், அங்கு பல இடங்களில் அசுத்தம் செய்யப்பட்டுள்ளதை பார்த்து, கவலை அடைந்தார். இதையடுத்து, மேற்கு வங்கத்தில், பொது இடங்களில் அசுத்தம் செய்வோருக்கு, அதிகபட்சமாக, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News