Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 6, 2018

பி.ஆர்க்., படிப்பில் சேர விதிகள் மாற்றம் பிளஸ் 2வில், 3 பாடங்கள் கட்டாயம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
'பி.ஆர்க்., கட்டடவியல் படிப்புக்கு, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை கட்டாயம் படித்திருக்க வேண்டும்' என்ற நிபந்தனை, இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.இதற்கான உத்தரவை, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் பதிவாளர், ஓபராய் பிறப்பித்துள்ளார்.



அதன் விபரம்:வரும் கல்வி ஆண்டில், பி.ஆர்க்., படிக்க விரும்புவோர், பிளஸ், 2வில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். பொது தேர்வில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்று, நாட்டா நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

பிளஸ் 2 வகுப்பை முறைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 என, படித்திருக்க வேண்டும். டிப்ளமா முடித்தவர்களுக்கு, பிளஸ் 2வுக்கு சமமான கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்படும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கு, மத்திய மனிதவள அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News