Thursday, November 29, 2018

25 வயதிற்கு மேற்பட்டவர்களும் 'நீட்' தேர்வு எழுதலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வு, 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்டரன்ஸ் டெஸ்ட்' எனும் 'நீட்' தேர்வு. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களைத் தவிர, இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் இந்த மருத்துவப் படிப்புகளை படிக்கவும், 'நீட்' தேர்வை எழுத வேண்டியது கட்டாயம். 



இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது. இத்தேர்வு எழுதுவதற்கான உச்ச வயது வரம்பு, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி.,) மாணவர்களுக்கு 30 ஆகவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 25 எனவும் நிர்ணயிக்கப்பட்டது



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News