Saturday, November 10, 2018

நாளை தமிழகத்தில் குரூப்-2 தேர்வு: நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!!

நாளை தமிழகத்தில் குரூப்-2 தேர்வு நடக்க இருக்கிறது. இது பற்றி ஒரு பார்வை!





தமிழகத்தில், அரசு பணிகளில் சேர, தமிழக அரசு பணியாளா தோவாணையம்(டிஎன்பிஎஸ்சி) சாாபில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

1199 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு, நாளை நவம்பர் 11 ல் நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியாகியது.

நாளை நடைபெறும் குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வுக்கு 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர்.



இதற்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட 997 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நினைவில் வைக்கவேண்டியவை :


காலை 9 மணிக்குள் தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
ஹால் டிக்கெட் கண்டிப்பாக தேர்வறைக்குள் எடுத்து செல்ல வேண்டும். ஹால்டிக்கெட் இல்லாமல் தேர்வறையில் உள்ளே செல்ல அனுமதியில்லை

நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

எந்த ஒரு மின்னணு சாதன பொருட்களுக்கும் தேரதேர்வறைக்குள் அனுமதி இல்லை.



10 நிமிடத்திற்கு முன்னதாக உங்களின் வினாத்தாள் வழங்கப்படும்,
பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள்தான், தரப்பட்டுள்ளதா? என சரி பார்க்கவேண்டும்.
விடைகளை OMR விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News