Saturday, November 17, 2018

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கையேடு: விருதுநகர் சி.இ.ஓ., தகவல்

விருதுநகர்:'' மெல்ல கற்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 ஆயிரம் சிறப்பு கையேடு வழங்க உள்ளதாக,'' முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது:

விருதுநகர் மாவட்ட மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற தேவையான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்ச்சி பெற வைக்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

ராம்கோ சிமென்ட்ஸ் சமுக மேம்பாட்டு நிதியில் 5 ஆயிரம் கேள்வி பதில்கள் கொண்ட சிறப்பு கையேடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் பிளஸ் 2 தேர்விற்கும் கல்லுாரிகள் சார்பில் சிறப்பு கையேடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



'நீட்' தேர்விற்கான பயிற்சிகள் 11 மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சி பெறும் வகையில் விருதுநகர் சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் எஸ்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி நடத்தப்பட உள்ளது , என்றார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News