Wednesday, November 21, 2018

ரூ.30 ஆயிரம் உதவித் தொகையுடன் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி கணக்காளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.





இப்பணியிடங்களுக்கு மாத உதவித் தொகையுடன் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.



பணி : பயிற்சி கணக்காளர் காலிப் பணியிடம் : 150 வயது வரம்பு : 2018 நவம்பர் 01ம் தேதியின்படி 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி:- வணிகவியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். அல்லது வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை :-

முதல் ஆண்டிற்கு : ரூ. 25,000 இரண்டாம் ஆண்டிற்கு : ரூ. 30,000 (இதர சலுகைகள் தனியே வழங்கப்படும்) தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் மூலமாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600 எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு :

ரூ.100 கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாகவே



விண்ணப்பிக்கும் முறை : www.nationalinsuranceindia.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 2018 நவம்பர் 27



இப்பயிற்சி குறித்தான மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து அறியவும் https://nationalinsuranceindia.nic.co.in/portal/page/portal/Corporate/Home?Language=Hindi அல்லது www.nationalinsuranceindia.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News