தமிழகத்தில் நாளை மீண்டும் மழை தொடங்கும் எனவும், டிசம்பர் 5-ம் தேதி மீண்டும்
ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளதாகவும் அப்போது பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வுமைய அதிகாரி கூறியதாவது,
மாலத்தீவு அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கும். இதனால் டிசம்பர் 1-ம் தேதி வரை இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். நாளை முதல் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment