Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 22, 2018

புயலில் சிக்கிய 40 பள்ளிகள் சேதம் இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் 'கஜா' புயலில் சிக்கி 40 பள்ளிகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை அளிக்க உள்ளார்.



'கஜா'வின் கோரத்தாண்டவத்துக்கு பள்ளிக்கூடங்களும் தப்பவில்லை. பல இடங்களில் பள்ளிகள் மீது மரங்கள் விழுந்து கட்டடங்கள் சேதம் அடைந்தன. இப்பள்ளிகளின் விவரம், சேத மதிப்புகளை பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கோரி இருந்தார்.திண்டுக்கல்லை பொறுத்தவரை 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன.

குறிப்பாக, அய்யலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நின்ற 45 மரங்கள் 'கஜா'வின் ஆட்டத்தால் சாய்ந்தன. செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் மீது 4 மரங்கள் சாய்ந்து விழுந்தன. செட்டியப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 120 மீட்டர் நீளத்துக்கு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.



கொடைக்கானலில் 10க்கும் அதிகமான பள்ளிகள் மரம் விழுந்து சேதம் அடைந்தன. சேத விவரங்களை சி.இ.ஓ., சாந்தகுமாருக்குதலைமை ஆசிரியர்கள் அனுப்பினர்.அவர் கூறும்போது, 'திண்டுக்கல் மாவட்டத்தில் 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக கொடைக்கானலில் மரம் விழுந்ததில் 6 பள்ளி கட்டடங்களில் விரிசல் விழுந்து மழை நீர் ஒழுகுகிறது. இது குறித்து கலெக்டர், பள்ளி கல்வி இயக்குனருக்கு அறிக்கை அளித்துள்ளோம். விரைவில் அரசின் உதவியோடு சீரமைப்பு பணி துவங்கும்' என்றார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News