Tuesday, November 20, 2018

நாளை மேலும் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை: சற்றுமுன் அறிவிப்பு!




கஜா புயலால் நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் முடங்கியது. கஜா புயலுக்கு இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.



தஞ்சை, திண்டுக்கல், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 நிவாரண முகாம்களில் 2,49,083 பேர் உள்ளனர். கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் 1.12 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. வேதாரண்யத்தில் மட்டும் 4 லட்சம் தென்னை மரங்கள் உட்பட 27.50 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன என தமிழக அரசு முதல்கட்டமாக தெரிவித்தது.



இந்நிலையில், சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தாலும், வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா பகுதியில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதாலும், நாளை நாகை, புதுக்கோட்டை, கொடைக்காணல், திருவாரூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும், மகாதீபத்தையொட்டி நவ.23ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News