Wednesday, November 21, 2018

பள்ளி-கல்லூரிகளில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள செல்போன் கோபுரங்களை அகற்ற வேண்டும்



பெங்களூருவில் செல்போன்கோபுரங்கள் அமைப்பது குறித்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, கர்நாடக மாநிலத்தில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி களுக்கு 50 மீட்டர் தொலைவில் தான் செல்போன் கோபுரங்கள் அமைக்க வேண்டும்.

பெங்களூருவில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலுத்தி அதற்கான உரிமத்தை பெற வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு ரூ.15 ஆயிரம் செலுத்தி அதற்கான உரிமத்தை பெற்று கொள்ளலாம். முன்பு செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்க 45 நாட்கள் வரை ஆகும். ஆனால் தற்போது 15 நாட்களில் அதற்கான அனுமதியை பெற்று செல்போன் கோபுரங்கள் அமைத்து கொள்ளலாம்.



பள்ளி, கல்லூரி, ஆஸ்பத்திரிகளில் இருந்து 50 மீட்டருக்குள் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் கோபுரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் கோபுரங்களுக்கு 3 மாதங்களுக்குள் உரிய அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



முன்னதாக, பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, துைண முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News