கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத்திய அரசு பல சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. ஆன்லைன் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அதேவேளை, ஏற்கனவே உள்ள அங்கீகார முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், பல்கலைக்கழகங்களில் உயர் தரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஏதுவாகவும், சுதந்திரமாக செயல்படவும், பல்கலைக்கழகங்களுக்கு கூடுதலாக பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியதும் இப்போதைய காலக்கட்டத்திற்கு மிக அவசியமானதாக உள்ளது.
இந்தியாவில் தற்போது 903 பல்கலைக்கழகங்கள் உள்ள போதிலும், வெறும் 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே சர்வதேச தரப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.