Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 6, 2018

வெளிவந்த அதிரடி எச்சரிக்கை: தமிழகத்தில் நவம்பர் 9-ம் தேதி வரை கனமழை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups




தமிழகம் மற்றும் கேரளாவில் நவம்பர் 6 ம் தேதி கனமழையும், நவ-7 முதல் 9 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதாலும், வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவாகி உள்ள காற்றழுத்த பகுதி காரணமாகவும் நவ.,6 ம் தேதி தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். நவ.7 முதல் 9 வரை தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் ஒரு மணி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News