Saturday, November 24, 2018

'அறிவியல் அறிவோம் 'கலிபோர்னியா மரண பள்ளத்தாக்கின் பாறை நகர்வுகளுக்கு காரணம் என்ன ?

கலிபோர்னியா மரண பள்ளத்தாக்கின் பாறை நகர்வுகளுக்கு காரணம் என்ன ?



கலிபோர்னியாவில் சாதாரண கற்கள் மட்டுமின்றி, 300 கிலோ எடையுள்ள கற்களும் நகர்ந்து செல்கிறது. இதனால் பேய் பிசாசுகள் இதுபோல கற்களை நகர்த்துவதாக மக்கள் மத்தியில் அச்சம் பரப்பப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள் அந்தப் பள்ளத்தாக்கில் ஆய்வுகளை மேற்கொண்டனர். சில விஞ்ஞானிகள் சிறப்பு அனுமதி பெற்று தாங்கள் கொண்டு சென்ற கற்களை பொருத்தி ஜி.பி.எஸ் மூலமாக ஆய்வு செய்தபோது கல் நகர்ந்து செல்வதையும், அதன் தூரத்தையும் உறுதி செய்து கொண்டனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘இரவு நேரத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகவும், பகல் நேரத்தில் அதுவே உருகி தண்ணீராகவும் பெருக்கெடுக்கிறது.



மேலும், இதுவும் பாறை நகர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர் இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News