Thursday, November 29, 2018

மழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் - தஞ்சை ஆட்சியர்..!

கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் டிசம்பர் 1 முதல் மழை குறைய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அதன்படி இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.




இந்நிலையில், கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News