Monday, November 5, 2018

அரசு பள்ளிஆசிரியர்கள் ஆய்வு கூட்டம்




கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தினை மேலும் உயர்த்திடும் பொருட்டு அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த கூட்டத்திற்கு சி.இ.ஓ., முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா வரவேற்றார். கூட்டத்தில் கலெக்டர் சுப்ரமணியின் பங்கேற்று, விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் சிறந்து விளங்கிய 4 அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் அரசு பொதுத் தேர்வில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்த 425 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.



சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் சேவியர் சந்திரகுமார், ஆர்.கே.எஸ்., கல்லுாரி தாளாளர் மகுடமுடி, கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி வாழ்த்துரை வழங்கினார். கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News