Saturday, November 24, 2018

லோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

லோக்சபா தேர்தலுக்காக மாவட்டம் வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.



தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 1, 2, 3 மற்றும் 4 என அலுவலர்கள் பெறும் சம்பளத்தை அடிப்படையாக கொண்டு பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.



ஒரு தொகுதிக்கு ஆயிரத்து 500 அலுவலர்கள் வீதம் ,மாவட்டத்திற்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் அலுவலர்கள் தயார் செய்ய வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்கள் போட்டோ இதர விபரங்களை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் தொகுதி வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், ஆசிரியர்கள் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News