Friday, November 30, 2018

பெண் குழந்தை தற்காப்பு பயிற்சிக்கு நிதி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை,  ஆரோக்கியத்தை வலியுறுத்த தற்காப்பு பயிற்சி திட்டம் 2015ல் செயல்படுத்தப்பட்டது.



6 முதல் 8 ம் வகுப்பு பயிலும் மாணவியர் என, வட்டாரத்திற்கு 50 குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டன. இப்பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டில் துவங்க வேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்கம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டதால், இந்த ஆண்டு, நிதி ஒதுக்கப்படுவதில் இழுபறி நீடித்தது. மூன்று மாதங்களுக்கு பின், தற்போது 7,043 நடுநிலைப் பள்ளிகளில் பயிற்சி அளிக்க 6.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.



வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என்று, மூன்று மாதங்கள் இந்த பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியாளருக்கு மாதம் 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.






No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News