Friday, November 16, 2018

ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் முகாம்: பள்ளிக் கல்வித் துறை

ஆசிரியர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை ஆசிரியர்களுக்கான குறைதீர்
முகாம் நடத்தப்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.



பள்ளிக் கல்வித் துறை மீதான நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணப் பலன் மற்றும் பதவி உயர்வில் முரண்பாடு, ஓய்வூதிய பலன்கள் குறித்த வழக்குகளை, நிர்வாக அளவிலேயே சீர் செய்துவிடலாம்.


இதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லாததால், நீதிமன்றத்தை நாடுவதே இறுதித் தீர்வாகிவிட்டது. தேங்கிய வழக்குகள் மீது, ஒத்துழைப்பு வழங்குவதோடு, ஆசிரியர்களின் புகார்களை கேட்டறியவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே அமலில் இருந்த குறைதீர் முகாம், இனி கட்டாயமாக நடத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆசிரியர்களுக்குச் சேர வேண்டிய பணி, பண பலன்கள் பெறுவதில், உள்ள சிரமங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.


இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் மாதந்தோறும் முதல், சனிக்கிழமை குறைதீர் முகாம் நடத்த வேண்டும். இதில், பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இல்லாவிட்டாலும் தகவல் அளிப்பது அவசியம் என அதில் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News