Monday, November 12, 2018

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ராகியுடன் பால்!- புதுமுயற்சியில் சத்யராஜ் மகள்

அரசுப் பள்ளிகளில், `அட்சயப் பாத்திரம்' என்ற அறக்கட்டளையின் மூலம், காலைநேரத்தில் இலவசமாக உணவு வழங்க அனுமதி கோரி, திவ்யா சத்யராஜ் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.



தற்போது, அதற்கு ஒப்புதலை அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள திவ்யா சத்யராஜிடம் பேசினேன்.

``ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் கொடுக்கும் மதிய உணவை, இன்னும் ஊட்டச்சத்து நிறைந்ததாக எப்படிக் கொடுக்கலாம் எனக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். 

மேலும், இந்தியா முழுக்கப் பசியால் வாடும் 17 லட்சம் குழந்தைகளுக்குத் தினமும் இலவசமாக உணவு அளிக்கும், `அட்சயப் பாத்திரம்' என்ற அறக்கட்டளையின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்குக் காலை உணவை இலவசமாக வழங்க ஒப்புதல் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு `அட்சயப் பாத்திரம் அறக்கட்டளையின் சார்பாகக் கடிதம் எழுதியிருந்தோம்.



முதல்வர் ஒப்புதல் கொடுத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இதன்மூலம், அடுத்த கல்வியாண்டு முதல் எல்லா அரசுப் பள்ளிகளிலும் காலை உணவாக ராகியால் ஆன உணவும் பாலும் வழங்கப்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் பொருளாதாரம் என்று தடையாக இருக்கக் கூடாது. அதற்கு என்னால் உதவிகளைச் செய்ய நினைக்கிறேன்.
ஊட்டச்சத்து நிறைந்த வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்" என நம்பிக்கையுடன் சொல்லுகிறார் திவ்யா சத்யராஜ்.





Posted by KALVIEXPRESS

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News