Tuesday, November 20, 2018

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள்






கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் விளையாட்டு மைதானம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ள பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அடுத்த லத்தேரி, ஆற்காடு அடுத்த திமிரி ஆகிய பகுதியில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.



அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு, விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகளாக மாற்றப்படும். இதற்காக, முதல்கட்டமாக ₹96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் விளையாட்டில் ஆர்வமுள்ள, தகுதியான 50 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதியுடன் விளையாட்டு பயிற்சியுடன் கூடிய கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இதற்கான நிதியை அதிகரிக்க பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News