Sunday, November 25, 2018

"சம வேலைக்கு " "சம ஊதியம்" என்ற கோரிக்கைகாக மூன்றே நாளில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரிய போராளிகளை திரட்டிய போராட்டக்குழு








ஒரு நபர் ஊதியக்குழு அரசாணையை வெளியிட்டு 2009 க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்க இன்று (25-11-2018) மாபெரும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப் பிரம்மாண்டமாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து கொண்டிருப்பதாக நிர்வாகிகள் கூறினர்.

இவர்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் 23-12-2018 முதல் உச்ச கட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

23-12-2018 முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்த போராட்டத்தில் முதல் நாள் உண்ணாவிரதமும்,இரண்டாம் நாள் முதல் தண்ணீர் கூட அருந்தாமலும்,மூன்றாம் நாள் முதல் தினமும் ஒரு யூனிட் இரத்தம் வழங்கியும்,பின் உடல் நிலை மோசமாக உள்ள ஆசிரியர்களின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கியும் போராட உள்ளதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் திரு இராபர்ட் கூறினார்.



இவர்கள் ஏற்கனவே சென்னையில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News