Saturday, November 10, 2018

தனித்திறன் வளர்க்கும் தலைமை ஆசிரியர்

தேவதானப்பட்டிசில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக மோகன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன் பொறுப்பேற்றார். அதுமுதல் பல்வேறு மாற்றங்களை மாணவர்களிடம் ஏற்படுத்தினார்.





குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக அடையாள அட்டை வழங்கி தினமும் அதனுடன் அவர்களை பள்ளிக்கு வரவைத்தார். அவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும். 

அதற்கான மனநிலையைஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளியில் மாணவர்கள் பாராளுமன்ற அமைப்பை ஏற்படுத்தி ஓட்டளிக்கும் முக்கியத்துவம் தெரிவதற்காக மாணவர்கள் தேர்தலை நடத்தி அதிக ஓட்டுக்கள் பெற்றவர்கள் மாணவ பிரதமர், துணைப்பிரதமர் மற்றும் 12 அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர். 




விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்களை உற்சாகப்படுத்தி மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைத்தார்.அறிவியலில் ஈடுபாடு கொண்டவர்களை ஊக்கப்படுத்தியால் அவர்கள் கண்காட்சியில் பல்வேறு படைப்புகளை சமர்ப்பிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகள் பட்டியலில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்ய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. 

பள்ளி , மாணவர்களின் கல்வி , தனித்திறன் வளர்ச்சியில்அதிக ஆர்வம் காட்டும் இவரை பலரும் பாராட்டுகின்றனர்.தலைமை ஆசிரியர் கூறுகையில், ''பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளேன் ஆனால் இப்பள்ளி மாணவர்களின் வெவ்வேறான தனித்திறமைகளை கண்டறிந்தேன். அவற்றை வெளியில் கொண்டு வர வேண்டும்என்ற எண்ணத்தால் பள்ளி வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

எனது முயற்சிக்கு.பெற்றோர் ஆசிரியர் கழகம்,கிராம மக்கள் ஆசிரியர்கள் ,ஒத்துழைப்பு அளிக்கின்றனர்,'' என்றார். இவருக்கு பாராட்டு தெரிவிக்க 89409 11011



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News