Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 28, 2018

முட்டையில் மட்டும் நாம் கட்டாயமாக மிளகு சேர்த்து சாப்பிடுவது எதற்காக என்ற காரணம் தெரியுமா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


மிளகும் முட்டையும் ஒரு நல்ல காம்பினேஷனை உருவாக்கும். பலருக்கும் இந்த கலவை மிகவும் பிடிக்கும். ஏன் இந்த கலவை அனைவருக்கும் பிடித்தமாக உள்ளது என்பதை யோசிக்கும் போது இந்த பதிவு தயாரானது.



பலருக்கும் காலை உணவாக இருப்பது மிளகு சேர்த்து தயாரிக்கப்பட்ட முட்டை. அது ஆம்லேட்டாக இருக்கலாம் அல்லது பிரட் டோஸ்ட்டாக இருக்கலாம். ஏன் முட்டையுடன் மிளகு சேர்த்து தயாரிக்க நாம் பழகி இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்.

ஆரோக்கிய நன்மைகள்

மிளகிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் எதிர்பாராதவிதமாக அமைந்துள்ளன. செரிமானத்தை ஊக்குவித்தல், சருமத்தை மேம்படுத்துவது போன்றவை இதனை சில நன்மைகளாகும். 

புற்று நோயை எதிர்க்கும் ஒரு கூறாகவும் மிளகு இருப்பது இன்னும் ஆச்சர்யத்தை தருகிறது அல்லவா? இந்த ஆரோக்கியமான உணவான மிளகுடன் 7 கிராம் புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின் மற்றும் மினரல் கொண்ட முட்டையை இணைப்பதால் ஒரு ஆரோக்கியம் பொருத்திய காலை உணவு கிடைப்பதால் இதனை ஒதுக்க முடிவதில்லை.






சாப்பிட உந்துதல்

முட்டையில் மிளகு சேர்ப்பது முட்டை சாப்பிடுவதற்கான உந்துதலைக் கொடுக்கும். சிலருக்கு வெறும் முட்டையின் வாசனை பிடிக்காமல் சிலர் வாந்தி கூட எடுப்பார்கள். அந்த உணர்வை நீக்குவது இந்த பெப்பர் தான். மிளகின் ஆரோக்கிய நன்மைகளுடன் சேர்த்து அதன் கார தன்மை மக்கள் இதனை அதிகம் உட்கொள்ள காரணமாக உள்ளது. 

முட்டை போன்ற காரமில்லாத ஒரு உணவுடன் சிறந்த கலவையை இது உண்டாக்குகிறது. கீரை, பச்சை மிளகாய், கெட்ச் அப் , காளான் போன்ற பல்வேறு சுவை மிகுந்த உணவுப் பொருட்களுடன் பல்வேறு நிறக் கலவையுடன் முட்டையை சேர்த்து உண்டு மகிழலாம்.




ஆவலை தூண்டும்

ஒன்றுக்கு மேல் சாப்பிடுவதற்கான ஆவலைத் தூண்டுகின்றது. ஒரு முட்டை ஆம்லேட்டில் மேலே தூவப்படும் மிளகின் அழகைக் காணும்போது ஒன்றுக்கு மேல் முட்டையை சாப்பிடத் தூண்டும் ஆவல் நம்முள் எழுவது நிச்சயம்.



பலவகை ரெசிபிகள்

மிக அதிக அளவில் கண்ணாபின்னாவென எல்லா விதமாகவும் நாம் ட்ரை பண்ணக் கூடிய ரெசிபி எது என்றால் அது நிச்சயமாக இந்த முட்டை தான். எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். முட்டையை இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று வரைமுறை கிடையாது. அப்படியே தண்ணீரில் அவித்து சாப்பிடலாம். ஆம்லேட், பொரியல் வறுவல், டோஸ்ட் என்று எந்த விதத்தில் இதனை தயாரித்து சாப்பிட்டாலும் இதன் சுவை அலாதி.





சுவைக்காக மட்டுமே

வெறும் உப்பு சேர்ப்பதை விட, மிளகுடன் முட்டை சூப்பரோ சூப்பர். முட்டையில் உப்பு சேர்ப்பது என்பது தேவையற்றது. முட்டையில் ஏற்கனவே 62 கிராம் அளவு சோடியம் உள்ளது. இதற்கு மேல் உப்பு முட்டைக்கு தேவையில்லை. நாம் தினமும் நாள் முழுக்க சாப்பிடும் எல்லா உணவிலும் உப்பு சேர்த்து தான் சாப்பிடுகிறோம். ஆகையால் இந்த அருமையான மிளகு சேர்த்து தயாரிக்கும் முட்டையில் உப்பிற்கான அவசியம் இல்லை.



மிளகு சேர்ப்பது?



முட்டையில் என்ன சேர்க்கிறோமோ இல்லையோ கட்டாயமாக மிளகு சேர்த்துக் கொள்வது உலகம் முழுவதும் உள்ள ஒரு முறையாக இருக்கிறது. இவை இரண்டையும் பரிக்க முடியாத இணைகள் என்றே சொல்லலாம். இதற்கு முக்கியக் காரணம் பெரிதாக எதுவுமில்லை. ஒன்று சுவை. மற்றொன்று முட்டை நாற்றத்தைப் போக்குவதற்கு, மற்றொரு காரணம் சாப்பிடத் தூண்டும் உந்துதலை ஏற்படுத்துவதற்காக. அவ்வளவு தானேயொழிய வேறு எந்த காரணமும் இல்லை.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top