Sunday, November 11, 2018

ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.





பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலை கண்ணன் ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அதில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் விவரங்களை பெற்று அவர்களுடைய சான்றிதழ்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்



மேலும், 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் விடுமுறையில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய பணியாளர்களின் மற்றும் ஆசிரியர்கள் ஆகியவற்றின் விவரங்களை இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விடுமுறையில் இருப்பவர்கள், அதேபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள், அரசு விதிகளில் கூறப்பட்டிருப்பதால், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News