Sunday, November 4, 2018

தேசிய திறனாய்வு தேர்வு முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு!!!





புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்காக தேசிய திறனாய்வு தேர்வு முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா இரண்டு மையங்களில் ஆய்வு..

புதுக்கோட்டை,நவ4- தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வரை மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.அந்த முறையில் இன்று4-11-2018 (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,ஆலங்குடி அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,ஆவுடையார்கோவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பன்னிரெண்டு தேர்வு மையங்களில் தேசிய திறனாய்வுத்தேர்வு நடைபெற்றது.இந்த தேர்விற்கு புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 2613 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததில் 2339 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 274 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை. 



இந்த தேர்வானது பகுதி 1-ஆக மனத்திறன் தேர்வும், பகுதி -2ஆக படிப்பறித்தேர்வும் நடைபெற்றது. ஆலங்குடி அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தேசியத்திறனாய்வுத்தேர்வினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா மேற்பார்வையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர்,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(உயர்நிலை),பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆகியோரைக்கொண்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.



Popular Feed

Recent Story

Featured News