Saturday, November 10, 2018

வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது!




சென்னை: வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக உள்ள புயலுக்கு தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய புயல் என கஜா புயல் எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News