Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 22, 2018

ஏழைகளுக்கு உதவ முன் வந்த, ஏழைக் கலைஞர்கள்..! நெகிழ்ச்சியான சம்பவம்.!



கஜா புயலினால் பாதிக்கப் பட்டவர்களுக்காக, பல்வேறு அமைப்பில், நிதி மற்றும் பொருட்கள் திரட்டப்பட்டு, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு, நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.



தமிழக நாட்டுப்புற இசை கலை பெருமன்றம் சார்பில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் நிவாரணப் பொருட்கள் திரட்டப் பட்டது. இந்த நிதி மற்றும் நிவாரணப் பொருட்களுக்காக, நடனக் கலைஞர்கள், நடனம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், தப்பாட்டம் நடத்தினர்.





மதுரையில், அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், செயின்ட் மேரீஸ் சர்ச் பகுதி, சிந்தாமணி, பழங்கானத்தம், ஜெய்ஹிந்த்புரம் ரவுண்டானா பகுதிகளில் இந்தக் கலை நிகழ்ச்சிகள் யாவும் நடைபெற்றன.

பலர், அரிசி உள்ளிட்ட பொருட்களாகவும், பணமாகவும் வழங்கினர். மொத்தமாக, 20 ஆயிரம் ரூபாய் வரை, இந்தக் கலை நிகழ்ச்சியினால் வசூல் ஆனது. அதைக் கொண்டு, நிவாரணப் பொருட்களை வாங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.



ஏழைகளின் துயரம் துடைக்க, இந்த ஏழைக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி, வசூல் செய்து, நிவாரணப் பொருட்கள் அனுப்பியது, பார்ப்பவரை நெகிழச் செய்தது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News