Saturday, November 17, 2018

தேசிய அறிவியல் மாநாடு: அரசு பள்ளி மாணவியர் தேர்வு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள, அரசு பள்ளி மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம், கடந்த, 11ல் கோவையில், தமிழக அளவில் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில், பாலவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவியர் ஹரினா, ஆனந்தி, கிருத்திகா, குமுதா ஆகியோர் சார்பில், இரண்டு ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன. 

இதில், ஹரினா, ஆனந்தி ஆகியோர் சமர்ப்பித்த, 'பசுமை இந்தியா திட்டம்' என்ற ஆய்வறிக்கை, டிச. 27ல், ஒடிஷா மாநிலம், புவனேஸ்வரில் நடக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டது.

அனைத்து மாணவியர் மற்றும் வழிகாட்டிய ஆசிரியர் சங்கர் ஆகியோரை, முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி, டி.இ.ஓ., பொன்முடி, தலைமையாசிரியர் சிவமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News