Friday, November 16, 2018

கல்வி உதவித் தொகை புதுப்பிப்பு விண்ணப்பம்: சி.பி.எஸ்.இ. வரவேற்பு

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மத்திய அரசு கல்வி உதவித் தொகைக்கான புதுப்பிப்பு விண்ணப்பத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வரவேற்றுள்ளது.



பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, உயர் கல்வி பெறுவதற்கான கல்வி உதவித் தொகையை படிப்பு க் காலம் முழுவதும் மத்திய அரசு வழங்குகிறது.

கடந்த 2014-இல் இந்த மத்திய கல்வி உதவித் தொகையை வாங்க ஆரம்பித்த கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து 4-ஆவது புதுப்பித்தல் விண்ணப்பத்தை சி.பி.எஸ்.இ. வரவேற்றுள்ளது.



இந்த விண்ணப்பப் படிவம் www.cbse.nic.in என்ற இணையதளத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு செய்ய டிசம்பர் 15 கடைசி நாளாகும். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமர்ப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News