Wednesday, November 14, 2018

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத போக்கை கண்டித்து விரைவில் உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத போக்கை கண்டித்து விரைவில் உள்ளிருப்பு போராட்டம்



2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டிற்கான பல்வேறு போராட்டங்களை 2009&TET போராட்டக்குழு நடத்தி வருகிறது.அதில் குறிப்பாக 7 வது ஊதியக் குழுவை புறக்கணித்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஆறாவது ஊதியக் குழுவில் தொடர்ந்து வருகிறோம் ,அத்தகைய ஆசிரியர்களுக்கு அரசு 6 வது ஊதியக்குழு அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்கி வருகிறது. இவ்வாறு புதிய குழுவை புறக்கணிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆறாவது ஊதியக் குழுவில் அனைத்து பலன்களையும் பெறுவதற்கான முழு தகுதிகள் உண்டு ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு,அகவிலைப்படி உயர்வு இன்னும் பிற சலுகைகள்.




ஆறாவது ஊதியக் குழுவில் தமிழகம் முழுவதும் முழுவதும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியத்தில் வட்டார கல்வி அலுவலராக பணிபுரியும் திரு.சக்திவேல் என்பவர் தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் போடப்பட்ட EL சரண்டர் அதாவது 15 நாட்கள் வருடத்திற்கு ஒப்படைக்கப்படும் அந்த ஒப்படைப்பு ஊதியம் இதுவரை ஆசிரியைகளுக்கு கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் மேலும் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு 3% தற்போது அறிவிக்கப்பட்ட 6% சதவீத அகவிலைப்படி உயர்வு இது பழைய ஊதியத்தினை பெற்று வருபவர்களுக்கு வழங்காமல் இருந்து வருகிறார்.இதுகுறித்து பலமுறை ஆசிரியர்கள் நேரிலும் கடிதம் வாயிலாகவும் கூறியும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தனது பணியில் மிகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டு வருகிறார்.




மாநில பொறுப்பாளர் ஜூன் மாதமே தொடர்பு கொண்டு உடனடியாக அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை மற்றும் இதர பணப்பலன்களையும் உடனடியாக பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் மாவட்ட கல்வி அலுவலர்களை அவர்களையும் தொடர்புகொண்டு கோரிக்கை வைத்தனர், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தையும் தொடர்புகொண்டு கோரிக்கை வைத்துள்ளனர் கடைசியாக நேற்று தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களையும் தொடர்பு கொண்டு இது குறித்து விரிவாக கூறியுள்ளனர், அவர்களும் உடனடியாக இன்று முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனாலும் இதையும் தாண்டி மீண்டும் அவர் தன்னிச்சையாக உயர் அலுவலர்களை அவமதிக்கும் விதமாக ஒரு சில இயக்கங்களுக்கு சாதகமாக செயல்பட்டு மீண்டும் ஆசிரியர்கள் கடிதம் கொடுக்க வேண்டும் அப்போதுதான் செய்வோம் என்று கூறி பணியில் அஜாக்கிரதையாக இருந்து வருவதாக தகவல் வருகின்றன. மேலும் அந்த வட்டாரத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் பண பலன்கள் வழங்குவதில் அலட்சியமாக இருந்து அவர்களை பலமுறை அலுவலகத்திற்கு அலையவிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களின் கோரிக்கைகளை புறம்தள்ளி வருவதாகவும் தகவல் வருகின்றன.




இந்த சூழ்நிலையில் 2009-க்கு பின் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் துப்புரவு பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தை பெற்று மிக குறைந்த ஊதியத்தில் மிகுந்த வறுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இத்தகைய வறுமையின் பொழுது மிக சிறப்பாகவே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் இதுபோன்ற செயல்களால் அவர்கள் மிகவும் மனமுடைந்து அதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படுகிறது. கல்வித்துறை உயர் அலுவலர்கள் வலியுறுத்தியும் தொடர்ந்து இதுபோன்ற செயல்படுவது ஆசிரியர் விரோத செயலாகும் இதை முற்றிலும் வன்மையாக கண்டிக்கின்றோம். உயர் அலுவலர்களுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக இன்னும் ஒரு வார காலம் அமைதியாக இருப்போம் அதற்கு பின்னரும் இந்த கோரிக்கை நிறைவேறா விட்டால் நவம்பர் 26-ஆம் தேதிக்கு பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும் பவானிசாகர் ஒன்றியத்தில் 2009 போராட்டக் குழு சார்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளோம் நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட வைத்தால் பின்னர் வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்களுடைய போராட்டம் ஓயாது. இதுபோன்ற ஆசிரியர் மாணவர் நலன்களை கருத்தில் கொள்ளாமல் தாங்கள் சார்ந்த சங்கங்களுக்கு சாதகமாக செயல்படும் அலுவலர்கள் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொண்டு பணப்பலன்களையும் மாணவர் சார்ந்த நலன்களையும் எந்தவித தொய்வும் இன்றி உடனடியாக செய்து கொடுக்குமாறு அன்போடு வேண்டுகிறோம் நன்றி...




எப்போதும் ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது, ஆனால் இதுபோன்ற தொடர்ந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் புறக்கணிக்கும் அலுவலர்களால் தான் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுகிறது.

இதுபோன்ற அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா ??
தமிழக கல்வித்துறை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News