Wednesday, November 21, 2018

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!!

நாளை நாகை வருவாய் கோட்டம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு வெளியாகியானது. சட்ட பல்கலைக் கழகம் தஞ்சை மன்னர் சரபோஜி மன்னர் கல்லூரியில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





நாளை நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வங்ககடலில், வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.





இதே போல, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்தில் நாளை & நாளை மறுநாள் நடைபெற இருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.



அதே போல, நாளை நடைபெற இருந்த சட்ட பல்கலைக்கழக தேர்வுகள், தஞ்சை மன்னர் சரபோஜி மன்னர் கல்லூரியில் நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News