Saturday, November 3, 2018

அரியலூர் மாணவி அனிதா நினைவாக புதிய செயலி அறிமுகம்








அரியலூர் மாணவி அனிதா நினைவாக புதிய செயலி ஒன்று தொடங்கப் பட்டுள்ளது
. கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அரியலூர் மாணவி அனிதா நினைவாக புதிய செயலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 




டெல்லியைச் சேர்ந்த ஐபிஸ் அதிகாரி ஜெகதீசன் என்பவரது மகள் இனியாள் இந்த செயலியை உருவாக்கி உள்ளார்.

அங்குள்ள சமஸ்கிருதப் பள்ளியில் இனியாள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அனிதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில் நீட் தேர்வின் மாதிரி வினாத்தாள்களும் அது தொடர்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன

Popular Feed

Recent Story

Featured News