Thursday, November 29, 2018

நீட் தேர்வுக்கு விண்ணபிப்பதற்கான அவகாசத்தை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்!!

பொதுப்பிரிவில் 25வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவைக் கூடுதலாக ஒருவாரம் நீட்டித்துள்ளது.



நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்குத் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இயின் கீழ் உள்ள தேசியத் தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. அடுத்த ஆண்டு மே ஐந்தாம் நாள் நடைபெறும் நீட் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுப்பிரிவில் 25வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.



இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பிரிவைச் சேர்ந்த 25வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதலாக ஒருவாரம் காலக்கெடு வழங்க வேண்டும் எனத் தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 25வயதுக்கு மேற்பட்டோரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதித்திருப்பது வயது வரம்பு குறித்த சிபிஎஸ்இக்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News