Friday, November 16, 2018

பட்டயக்கணக்காளர் தேர்வுக்கான பயிற்சி தொடக்கம்





பயிற்சியாளருக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் அமைச்சர் கேஏ.செங்கோட்டையன்.

சென்னை பல்லாவரம் வேல்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பட்டயக் கணக்காளர் தேர்வுக்கான பயிற்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

நாட்டில் 2 லட்சத்து 85 ஆயிரம் பேரும், தென்னிந்தியாவில் 55 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் 17,500 பேரும் பட்டயக் கணக்காளர்களாக உள்ளனர். தற்போது பட்டயக் கணக்காளர்களின் தேவை அதிகரித்துள்ளது.



வணிகவியல் கல்வி பயிலும் பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் பட்டயக் கணக்காளர் பயிற்சி பெறுவதன் மூலம் தங்களது எதிர்காலத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் 25 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனைவரும் உறுதுணையாகத் திகழ வேண்டும்.

சிறப்பாசிரியர் இறுதித் தேர்வுப் பட்டியலில் தமிழ்வழிச் சான்றிதழ் பிரச்னை குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் தமிழ்வழியில் படித்தவர்கள் அதற்கான ஆவணங்களைத் தொடர்புடைய கோட்டாட்சியரிடம் காண்பித்து சான்றிதழ் பெற வேண்டும். அதேபோல், ஆதரவற்ற விதவைகளும், முன்னாள் ராணுவத்தினரும் தங்களுக்கு உரிய சான்றிதழைக் கோட்டாட்சியரிடம் பெற வேண்டும்.



இதுதொடர்பாக 10 நாள்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 4 வார காலத்துக்குள் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால் பொதுப்பிரிவினர் மூலம் அந்த இடங்களை நிரப்ப வாய்ப்புள்ளது அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், தென்னிந்திய பட்டயக் கணக்காளர் கவுன்சில் தலைவர் கே.ஜலபதி, வேல்ஸ் பல்கலைக் கழகத் துணைத் தலைவர் ஜோதிமுருகன், தென்சென்னை முன்னாள் மக்களவை உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News