Wednesday, November 21, 2018

நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு

நர்சரி பள்ளிகளுக்கு, அங்கீகார நீட்டிப்பு வழங்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி பள்ளிகள், பள்ளிக் கல்வி துறை அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன.




இந்த பள்ளிகளில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஆகிய வகுப்புகளுடன், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், ஆங்கில வழியில் நடத்தப்படுகின்றன.இந்த பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இந்த அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வி நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டதால், முதன்மை கல்வி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில், தொடக்க கல்வி அலுவலகங்கள் மாற்றப்பட்டுள்ளன.




அதனால், நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டு உள்ளது.தொடக்க கல்வி அலுவலர்களால், பல மாவட்டங்களில் விதிகளை மீறி, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால், அவற்றை ஆய்வு செய்த பின், அங்கீகாரம் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.




அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், நர்சரி பள்ளிகளுக்கு, விதிகளை பின்பற்றி, அங்கீகார நீட்டிப்பை வழங்குமாறு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News