Monday, November 5, 2018

'டிஜி' லாக்கரில் ஆவணங்கள் பதிவு: வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

ஊட்டியில், 'டிஜி' லாக்கர் முறையில் மொபைல் போனில் பதிவு ஆவணங்களை வாகன ஓட்டிகள் சமர்பிப்பது குறித்து, போலீசார் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






'டிஜி' லாக்கர் எனும் சேவை மூலம், ஓட்டுனர் உரிமம், ஆதார், காப்பீட்டு திட்டம் போன்ற சான்றிதழ்கள் 'டிஜிட்டல்' முறையில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். 

மேலும், இந்த 'டிஜிட்டல்' பதிவேற்ற ஆவணங்களை அடையாள சான்றிதழ்களாக பயன்படுத்தி கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போலீசார் சார்பில், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



டவுன் டி.எஸ்.பி., திருமேனி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ், எஸ்.ஐ.,க்கள் சந்திரன், சரசுமணி உள்ளிட்ட போலீஸ் குழுவினர் சேரிங்கிராசில் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.டவுன் டி.எஸ்.பி., திருமேனி கூறுகையில், ''வாகன ஓட்டிகள் தங்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகன காப்பீட்டு சான்றிதழ் போன்ற ஆவணங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் பெட்டக மூலம் 'டிஜி' லாக்கர் முறை மொபைல் போனில் பதிவு செய்யலாம். 

இவ்வாறு, பதிவு செய்யப்படும் ஆவணங்கள், 2000ம் ஆண்டின், தகவல் தொழில் நுட்ப சட்டப்படி அசல் ஆவணங்களுக்கு இணையான ஆவணங்களாக கருதப்படும்.'' என்றார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News