Monday, November 12, 2018

அரசுப்பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ஏன் கற்பிக்கக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கேள்வி





அரசுப்பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ஏன் கற்பிக்கக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச கற்றுக்கொடுக்க வேண்டும் மற்றும் அனைத்து தமிழ் வழி பள்ளிக்கூடங்களிலும் ஸ்போக்கன் இங்கிலீஷை ஒரு பாடமாக எடுத்து நடத்த வேண்டும் என தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுதாக்கல் செய்திருந்தார்.



இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் தமிழ் மாணவர்களுக்காக, அரசு பள்ளிகளில் ஏன் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்களை நடத்தக் கூடாது?" என நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் வருகிற டிசம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News