Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 22, 2018

ஒரு லட்சம் ஏடிஎம்-கள் நாடு முழுவதும் மூடப்படும் அபாயம்... தனியார் நிறுவனம் தகவல்



2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்-களை நி்ர்வகிக்கும் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.



நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2 லட்சம் ஏ.டி.எம் கள் உள்ளன. இவைகளை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் ஏ.டி.எம் நிர்வகிக்கும் அமைப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏ.டி.எம்-களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டு வேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது செயல்படும் ஏடிஎம்-களில் பாதிக்கும் மேற்பட்டடை மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏ.டி.எம்-களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள் மற்றும் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.

இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான மூடலுக்கு வழி வகுக்கும் என்று ஏ.டி.எம் நி்ர்வகிக்கும் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News