Saturday, November 24, 2018

பேய் பிடித்து மாணவிகள் ஆட்டம்.! அதிர்ந்து போன ஆசிரியர்கள்.!! மாவட்ட கல்வி நிர்வாகத்தை நாடிய ஆசிரியர்கள் !!



காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள கிராமம் கீரநல்லூர். இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் சுமார் 230 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.




இந்த பள்ளியில் அந்த கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் சனிக்கிழமை அன்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது அங்குள்ள 7 ம் வகுப்பில் பயிலும் 15 மாணவிகள் திடீரென எழுந்து கூச்சல் போடவும்., ஆடி குதிக்கவும் துவங்கினர்.

இதனை கண்டு ஒருகணம் செய்வதறியாது திகைத்துப்போன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்., மாணவிகள் அமைதியாகும் வரை பொறுமை காத்தனர். பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவர்களின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து செல்லக்கூறி அனுப்பிவைத்தனர்.



இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால்., திங்கட்கிழமை வழக்கம்போல பள்ளி நடைபெற்றது. அப்போது அதே வகுப்பறையில் இருந்த மாணவிகள் மீண்டும் அதே போன்று செய்தனர்.

மீண்டும் அவர்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பியவுடன் அவர்களிடம் இது குறித்து ஆசிரியர் கேட்ட போது., காரணம் தெரியாமல் திகைத்தனர். பின்னர் அவர்களின் பெற்றோரை மீண்டும் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் அவர்கள் வந்தவுடன் அவர்களை மருத்துவமைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.



இந்த செய்தியானது மாணவர்களிடையே., அவர்களுக்கு பேய் பிடித்துள்ளது என்று பரவவே., விசயம் சுற்றுவட்டார கிராமங்களில் தீயை போல பரவியது. இதனால் பயந்துபோன பிற பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்த ஆசிரியர்கள்., இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதற்க்காக மனநல ஆலோசகர்கள் மூலமாக ஆலோசனை வழங்குவதற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்
தமிழ்க்கடல் TELEGRAM  -  மில் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News