Monday, November 5, 2018

மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி பட்டறை

உடுமலை, கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பயிற்சி பட்டறை நடந்தது.

கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் கருமத்தம்பட்டி ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி இணைந்து, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பயிற்சி பட்டறையை கல்லுாரியில் நடத்தியது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயிற்சியில் பங்கேற்றனர். 



பேராசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராஜன், திருப்பூர் மாவட்ட பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், ஆசிரியர் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

செயற்கை கோள்களை, கண்ணாடிகள் இல்லாமல் கண்களால் காண முடியும், பேரிடர் நேரங்களில் ேஹாம் ரேடியோக்களின் பயன், பல்வேறு வானியல் நிகழ்வுகள் குறித்தும், அறிவியல் விஞ்ஞானி சுதாகர் மற்றும் கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

மேலும், மாணவர்களுக்கு எளிதில் விளக்கும் வகையில், 'மேஜிக்', நிகழ்வுகளை பிரபாகரன் செய்து காட்டினார். நிறைவு விழாவில், விஞ்ஞான் பாரதி அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் தலைமை வகித்தார்.மாணவர்கள், பயிற்சி பட்டறையில் பங்கேற்றதன் பயன்கள் குறித்து கலந்துரையாடினர். பயிற்சியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற மாணவர்களுக்கு, இளம் விஞ்ஞானிகள் விருது மற்றும் சான்றிதழ்களும், ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News