Wednesday, November 7, 2018

தீபாவளி: தபால் தலை வெளியிட்ட ஐநா!





தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சிறப்பு தபால் தலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை அஞ்சல் அமைப்பானது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டது. சர்வதேச அளவில் பரிமாறப்படும் கடிதங்களில் ஒட்டத்தக்க வகையில் இந்த தபால் தலைகள் உள்ளன. 

இதன் விலை 1.15 அமெரிக்க டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச தபால் தலைகளுக்கான சராசரி விலையாகும். மொத்தமாக 10 தபால் தலைகளுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பெரிய படம் ஒன்றும் இந்த அட்டையில் உள்ளது. தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஹேப்பி தீவாளி என்ற வாசகங்களும், தீபங்களின் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.



கடந்த அக்டோபர் மாதமே இந்த தபால்தலையானது ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டாலும், இவை தற்போது தான் விற்பனைக்கு வந்துள்ளன.

“ஐநாவில் தீயவற்றுக்கும் நல்லவற்றுக்குமான போராட்டம் தினமும் நிகழ்கிறது. தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது, தீமையைப் போராடி நன்மை வெற்றி கொண்ட தேடலை விளக்கும்விதமாக இத்தபால் தலைகள் வெளியிடப்பட்டதற்கு நன்றி!” என்று இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ஐநாவுக்கான இந்தியத் தூதர் சையத் அக்பருதீன்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News