Tuesday, November 6, 2018

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: டெண்டர் அறிவிக்க அரசாணை

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் வினியோகிக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' எனும் அடையாள அட்டை வழங்கும் நோக்கில், 2012ல், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளம் உருவாக்கப்பட்டது.

இதில், தகவல்களை திரட்டி தொகுப்பதில், சிக்கல் நீடித்ததால், மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணையப்பக்கம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது.

பள்ளிகளின் தகவல் பலமுறை சரிபார்க்கப்பட்ட பின், தற்போது ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பார்கோடு இணைத்து, மாணவர்களின் பெயர், பள்ளி பெயர், முகவரி, ரத்த வகை உள்ளிட்ட அடிப்படை தகவல்களுடன் அச்சிட, தற்போது டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விரைவில் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'



மூன்றாம் பருவத்துக்கு, புதிய சீருடை வழங்கப்படும். இதனுடன், அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 'டெண்டர் கோர, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், விரைவில் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்' என்றனர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News