Thursday, November 15, 2018

எத்தனை மணிக்கு நம் நிறுத்தத்துக்கு பஸ் வந்து வரும்? : செல்பேசி மூலம் அறியலாம்!

ஓலா, ஊபருக்குச் சவால்விடத் தயாராகிறது மும்பை போக்குவரத்துக்குக் கழகம் (பெஸ்ட்). நமக்கான பேருந்துகள் எங்கே வருகின்றன
, எத்தனை மணிக்கு நம் நிறுத்தத்துக்கு வந்து சேரும் என்பதைப் பயணிகள் தங்கள் செல்பேசி மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக ரயில்களில் உள்ளதுபோலவே பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.







இதற்கான செலவு ரூ.112 கோடியாம். பேருந்துக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகளின் அரிதான நேரத்துடன் ஒப்பிட்டால், இந்தத் தொகை ஒருபொருட்டே இல்லை என்கிறார்கள் மும்பை பயணிகள். அப்புறம் என்ன? தமிழ்நாடு போக்குவரத்துக்கழகமும் களத்தில் இறங்க வேண்டியதுதானே?



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News