Saturday, November 17, 2018

புயல் காற்று யார் பெயர் வைக்கிறார்கள் என்று தெரியுமா?

யார் இந்தப் பெயர்களை வைக்கிறார்கள், இதற்கு என்ன அர்த்தம் என்ற கேள்வி எல்லோர்  மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த கேள்விகளுக்கான பதில்கள், பொதுவாக புயல் காற்று 61 கி.மீ வேகத்தில் வீசும்போது, அதற்கு பெயர் வைக்கப்படுகிறது. 



தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேசம், இலங்கை, மியான்மர், மாலத்தீவுகள், ஓமன் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளும் தலா 4 பெயர்களை பரிந்துரைக்கும். ஒவ்வொரு முறை புயல் தோன்றும்போதும், இந்தப் பெயர்கள் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன. 

உதாரணமாக இதற்கு முன் ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைத் தாக்கிய ‘டிட்லி’ புயலின் பெயர் பாகிஸ்தானால் வழங்கப்பட்ட பெயர். இதற்கு பட்டாம்பூச்சி என்று அர்த்தம். 



தற்போது தமிழகத்தைத் தாக்க வரும் புயலுக்கு தாய்லாந்து நாட்டினர் வழங்கிய கஜா என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், அடுத்த முறை புயல் ஒன்று உருவானால், அதற்கு இலங்கை வழங்கிய ‘பித்தாய்’ என்ற பெயர் வழங்கப்படும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News