Saturday, November 10, 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு க்யூ.ஆர்., கோடுடன் அடையாள அட்டை

க்யூ.ஆர்., கோடுடன், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது



தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மலைக்கிராமமான கெட்டுஹள்ளியில், கடந்த, 2011 முதல் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்படுகிறது.

இங்கு, க்யூ.ஆர்., கோடுடன் கூடிய அடையாள அட்டை, தர்மபுரி மாவட்டத்திலேயே முதன்முறையாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து, பள்ளி தலைமையாசிரியர் லோகநாதன் கூறியதாவது:

மாணவர்களின் கல்வித்தரம் குறித்து, பெற்றோர் அறிந்து கொள்ள ஏதுவாக, ஒன்பதாவது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, க்யூ.ஆர்., கோடுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.



மாணவர்களின் சுயவிபரம், அனைத்து தேர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண், வீட்டு பாடங்கள் போன்ற விபரங்களை, க்யூ.ஆர்., கோட்டை பயன்படுத்தி, மொபைல்போனிலேயே பெற்றோர் தெரிந்து கொள்ளலாம்.

தினமும் காலை, 5:00 மணிக்கு, மாணவர்களை படிக்க வைக்க, பெற்றோரை அறிவுறுத்தி வந்தோம்

தற்போது, மாணவர்கள் காலை எழுந்து படிக்கின்றனரா, இல்லையா என்ற விபரத்தை, ஆசிரியர்களுக்கு, மொபைல்போன் மூலம், மாணவர்களின், பெற்றோர் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News