Sunday, November 25, 2018

கல்வித்திறன் அறிய'கியூஆர் கோடு' முறை! வால்பாறை அரசு பள்ளியில் அசத்தல்


மாநிலத்தில் முதன் முறையாக, வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறனை பெற்றோரும் அறியும் வகையில், 'கியூஆர் கோடு' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



கோவை மாவட்டம், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 986 மாணவர்கள் படிக்கின்றனர். பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கண்டறியும் வகையில் 'கியூஆர் கோடு' முறையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. 




இதற்கான பணிகளை, வகுப்பு ஆசிரியர் சிதம்பரக்கண்ணன் செய்துள்ளார்.தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கூறியதாவது:அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பிளஸ் 2 வகுப்பில், கணக்கு மற்றும் புள்ளியியல் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, 'கியூஆர் கோடு' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News