Sunday, November 4, 2018

மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு!

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் விகிதத்திற்கு ஏற்ப ஆசிரியர்களைக் குறைக்க கல்வித் துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது



மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு! தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர்களின் விகிதப்படி மாணவர் எண்ணிக்கையை விட அதிக ஆசிரியர்கள் உள்ளனர். குறிப்பாக, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். 

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். அவ்வாறு உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு தேவைப்படும் பள்ளிகளில் பணியமர்த்தப்படுகின்றனர். 



ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற இடமாறுதல் செய்ய முடிவதில்லை. ஆகவே, தேவைக்கும் அதிகமாக உள்ள ஆசிரியர்கள் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது அந்தப் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஓய்வு பெறும் பணியிடத்தில் புதிய ஆசிரியரை நியமிக்காமல் அரசிடம் ஒப்படைக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.



Popular Feed

Recent Story

Featured News