Tuesday, November 27, 2018

காதுக்குள்ள அடிக்கடி குறுகுறுன்னு அரிக்குதா? குடையாதீங்க... இத பண்ணுங்க... சரியாகிடும்

சில நேரங்களில் நம் காதுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பு பொதுவாக செவிப்பாதையில் ஏற்படும். இந்த செவிப்பாதை என்பது நமது காதையும் செவிப்பறையும் இணைப்பது. இந்த அரிப்பு எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடியது தான்.



இந்த அரிப்பை போக்க நீங்கள் கண்ட பொருட்களையும் வைத்து குடையும் போது உங்கள் செவிப்பறை பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே இந்த காது அரிப்பு ஏற்பட முக்கிய காரணம் என்னவென்று பார்க்கலாம். கீழ்க்கண்ட இந்த பிரச்சினைகளை சரி செய்தால் உங்கள் காது அரிப்பும் நீங்கி விடும்.

காரணங்கள்

காது மெழுகு தேங்குதல்

காதுகளில் உள்ள மெழுகு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பயன்படுகிறது. ஆனால் அதிகமான மெழுகு காதுக்குள் தேங்கும் போது அரிப்பு ஏற்படலாம்.

எனவே இந்த மெழுகை போக்க காதை அதிகமாக குடைந்தெடுக்க வேண்டாம். இது மெழுகை காதுக்குள் அப்படியே நிறுத்தி விடும். அதற்கு பதிலாக காதுக்கான சொட்டு மருந்தை பயன்படுத்தி பிரித்தெடுக்கலாம். இதுவும் சரி வரவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.






கவனத்தில் வைக்க வேண்டியவை

காதில் தொற்று ஏற்படுதல்

காதில் அரிப்பு ஏற்படுவது சில நேரங்களில் தொற்றாக கூட இருக்கலாம். சளி, ப்ளு அல்லது அழற்சி போன்ற பாக்டீரியா, வைரஸ் தொற்றால் இது ஏற்படலாம். அதே மாதிரி நீச்சலடிக்கும் போது காதுக்குள் தண்ணீர் புகுவதாலும் அழற்சி ஏற்படும். காதுக்குள் இருக்கும் இந்த அதிக ஈரப்பதமே பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தி அரிப்பை ஏற்படுத்தி விடும்.
அரிப்பை நீக்க வேண்டும் என்றால் முதலில் நோய் தொற்றை குணப்படுத்த வேண்டும். இதற்கு நீங்கள் மருத்துவரை அணுகினால் அதற்குரிய சொட்டு மருந்தை கொடுத்து சரி செய்வார். இதை வாரத்திற்கு சில தடவை என பயன்படுத்தி வந்தால் சில வாரங்களில் சரி ஆகிவிடும். மற்ற தொற்றுகள் இருந்தால் ஆன்டி பயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.



சரும அழற்சி

காதுக்குள் உள்ள சருமம் அழற்சியால் பாதிக்கப்பட்டால் கூட அரிப்பு ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் ஹேர் ஸ்பிரே அல்லது சாம்பு மட்டுமே. அதே மாதிரி காதில் போடப்படும் காதணிகளின் உலோகம் நிக்கல், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் மெட்டல் போன்றவற்றால் கூட அழற்சி ஏற்படலாம். ஏர்பட்ஸ், காது கேட்கும் மெஷின் போன்றவை கூட காதில் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே உடனே சரும மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

எனவே உங்களுக்கு அழற்சி ஏற்படும் பொருளை முதலில் கண்டுபிடித்து அதை தவிர்க்க வேண்டும். உடனடியாக அரிப்பை போக்க நீங்கள் ஸ்டீராய்டு க்ரீமை பயன்படுத்தலாம்.





எக்ஸிமா அல்லது சோரியாஸிஸ்

எக்ஸிமா மற்றும் சோரியாஸிஸ் போன்ற நோய்களால் கூட செவிப்பாதையில் அரிப்பு ஏற்படலாம். இதையும் நீங்கள் காதில் சொட்டு மருந்துகளை கொண்டு சரி செய்யலாம். அரிப்பு அதிகமாக இருந்தால் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.



காதை சுத்தம் செய்யுங்கள்

ஒரு காட்டன் பஞ்சை எடுத்து உங்கள் செவிப்பாதையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். காதை சுத்தம் செய்ய பாப்பி பின்ஸ், பேப்பர் க்ளிப், மேட்ச் ஸ்டிக்ஸ், விரல்கள் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்யும் போது காதில் கிளிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எளிதாக அங்கே பாக்டீரியா தொற்று ஏற்படலாம். எனவே இது போன்ற பொருட்களை கொண்டு காது குடைவதை தவிருங்கள்




உணவு அழற்சி



உங்களுக்கு எதாவது காய்ச்சல், மகரந்த அழற்சி இருந்தால் அது கூட காதுகளில் அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சில அழற்சியை ஏற்படுத்தும் உணவுகளான பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் போன்றவை கூட காதுகளில் அரிப்பை உண்டாக்கலாம். இந்த அழற்சியை உண்டாக்கும் பொருட்களை கண்டறிந்து உடனே நிறுத்துவது நல்லது.
உணவை விழுங்கும் போதும் காதுகளில் முரட்டுத்தனமாக வலி ஏற்படும் அளவிற்கு உண்ணாதீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட அழற்சி அறிகுறிகளை குறித்து மருத்துவரிடம் பேசி கொள்ளுங்கள். தீவிரமான உணவு அழற்சி என்றால் எபிநெஃப்ரைன் எடுத்துக் கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News