Friday, November 30, 2018

CPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும் மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும்

தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் சுமார் 5,10,000 அரசு ஊழியர் ஆசிரியர் உள்ளிட்ட CPS சந்தா தாரர்கள் உள்ளனர். இவர்களிடமிருந்து நாளது தேதி வரை சுமார் ரூ.13,000,00,00,000/- CPS சந்தாத் தொகையாக அரசு பிடித்தம் செய்துள்ளது.
இதற்கு ஈடான அரசின்



பங்களிப்பாக, சுமார் ரூ.13,000,00,00,000/-யை இதுவரை அரசும் செலுத்தி வந்துள்ளது.

தற்போதைய சூழலில் இவ்வாறு ஈடு செய்ய வேண்டிய அரசின் பங்களிப்பானது, சுமார் ரூ.150/- கோடியிலிருந்து ரூ.200/- கோடி மாதாந்திர தொடர் செலவினமாக அரசின் சார்பில் செலவிடப்பட்டு வருகிறது.
அரசு ஊழியருக்கு ஓய்வூதியமோ, குடும்ப ஓய்வூதியமோ ஒரு பைசா கூட வழங்க இயலாத இந்த _CPS திட்டத்தால் அரசு ஊழியர்களின் ஊதியமும் அரசின் நிதியும் ஒருங்கே சுரண்டப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்தினால் _அரசின் பங்களிப்பான ரூ.13,000 கோடி உடனடி வருவாயாக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும்.
மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பான _ரூ.13,000 கோடி மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர வைப்பு நிதியாக அரசிற்குக் கிடைக்கும்.



இதுமட்டுமின்றி தற்போது மாதந்தோறும் அரசு பங்களிப்பாக அளித்து வரும் சுமார் ரூ.200/- கோடியை அரசு செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் அரசின் மாதாந்திர நிதிச் செலவினத்தில் மாதந்தோறும் ரூ.200/- கோடி குறையும்.

எனவே, CPS திட்டத்தை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக அரசிற்கு பெருத்த & தொடர் மாதாந்திர நிதி இழப்பு சரிசெய்யப்படுவதோடு சுமார் 5 இலட்சம் ஆசிரிய அரசு ஊழியர் குடும்பங்களும் பயனடையும்.

தமிழக மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இடையேயான இன்றைய (30.11.2018) பேச்சுவார்த்தையில் இது குறித்து வலியுறுத்தப்படும் என பிரடெரிக் எங்கெல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்




- திண்டுக்கல் எங்கெல்ஸ்!

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News