Thursday, November 22, 2018

CTET - சி.டி.இ.டி.,: நுழைவுச் சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) விண்ணப்பித்தவர்கள் வியாழக்கிழமை (நவ.22) முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு:



கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி. என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.

2018-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 92 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 2,296 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.



இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நுழைவுச் சீட்டு கிடைக்காதோர் 



இணையதளத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி நகல், கட்டணம் செலுத்தியதற்கான அத்தாட்சி ஆகியவற்றுடன் சி.டி.இ.டி. மையத்தை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவேண்டும். இந்த காலக் கெடுவுக்குள் தொடர்பு கொள்ளாதவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News